உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 12ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணி தர்மபுரி நகரமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

12ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணி தர்மபுரி நகரமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

12ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிதர்மபுரி நகரமன்ற கூட்டத்தில் ஒப்புதல்தர்மபுரி, அக். 29-தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகரமன்ற கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் லட்சுமி தலைமை வகித்தார். துணை சேர்மன் நித்யா முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷ்னர் சேகர் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.தர்மபுரி நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளில், ஏற்கனவே 19ல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மீதமுள்ள, 14 வார்டுகளில், 81.15 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், தர்மபுரி நகரில், தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தெரு விளக்குகளை உடனே சீரமைக்க, வார்டு கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.இதற்கு, நகராட்சி கமிஷ்னர் சேகர் பதிலளித்து பேசுகையில், ''பாதாள சாக்கடை திட்டப்பணிகள் திட்டமிட்டபடி, முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, தெரு நாய்களை பிடிக்கவும், சேதமான தெரு விளக்குகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தர்மபுரி நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது, குடிநீர் பணிகள், சாலை பணிகள், சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை அமைப்பது உட்பட, 49 பொருட்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தர்மபுரி நகரில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை