உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 19 பஞ்.,ல் நாளை குடிநீர் நிறுத்தம்

19 பஞ்.,ல் நாளை குடிநீர் நிறுத்தம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின், 500 மி.மீ., விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாய், தடங்கம் பகுதியில் கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, அக்குழாயை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால், ஆக., 20 நாளை ஒருநாள் மட்டும் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள, ஏ.ஜெட்டிஹள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஹள்ளி, பூதனஹள்ளி, தின்னஹள்ளி, டொக்குபோதனஹள்ளி, ஏலகிரி, லளிகம், மாதேமங்கலம், மானியதஹள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, நாகர்கூடல், நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, பாகலஹள்ளி, பாளையம்புதுார், சாமிசெட்டிபட்டி, சிவாடி, தடங்கம் ஆகிய, 19 பஞ்.,களுக்கான ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் தேவையான அளவு ஒகேனக்கல் குடிநீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ