மேலும் செய்திகள்
ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது
18-Dec-2024
தர்மபுரி: பாலக்கோடு அருகே, மகேந்திரமங்கலம் பகுதியில் கடந்த, 6 அன்று அதிகாலை, 4:00 மணிக்கு மகேந்திரமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட, 22,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதில், வாகனத்தில் வந்த ஓட்டுனர்களிடம் விசாரணை செய்ததில், சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, ராமசாமி தெருவை சேர்ந்த மணி-கண்டன், 25, மற்றும் தேனி மாவட்டம், அம்மாபட்டியை சேர்ந்த பெத்தனசாமி, 55, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
18-Dec-2024