மேலும் செய்திகள்
திருமணமான பெண் மாயம்
03-Aug-2025
தர்மபுரி:தர்மபுரி டவுன், நரசையரகுளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32. இவரது மனைவி வினோதினி. இவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமார் தர்மபுரி அருகே, பாரதிபுரத்தில் உள்ள மொபைல் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 26 அன்று அவருடைய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றவர் மாயமானார். மனைவி வினோதினி புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கொக்காரப்பட்டியை சேர்ந்த காளியப்பன், 75. இவருக்கு இடது கண் பார்வை குறைபாடு காரணமாக, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, 22 அன்று கண் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, 23 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த, 25 அன்று மதியம், 12:30 மணிக்கு மாயமானார். அவரின் மகன் காளியப்பன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Aug-2025