மேலும் செய்திகள்
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
12-Nov-2024
அரூர்: அரூர், திரு.வி.க., நகரிலுள்ள ஐஸ்கிரீம் கடைக்கு நேற்று முன்தினம், 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், 90 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு, 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். கடையிலிருந்த பெண் மீதி தொகையான, 410 ரூபாயை கொடுத்தார். அதை வாங்கிய வாலிபர்கள், 200 ரூபாயை மறைத்து வைத்துக்கொண்டு, ஐஸ்கிரீம் வேண்டாம், நீங்கள், 210 ரூபாய் தான் கொடுத்தீர்கள். எங்களுக்கு முழு பணத்தை கொடுங்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், கச்சேரிமேட்டிலுள்ள மெடிக்கல் ஒன்றில், 45 ரூபாய்க்கு தைலம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். கடைக்காரர் மீதி தொகையான, 455 ரூபாயை திருப்பி கொடுத்தார். அதில், 200 ரூபாயை மறைத்து கொண்ட வாலிபர்கள், எங்களுக்கு தைலம் வேண்டாம் எனக்கூறி, தைலத்தையும், 250 ரூபாயையும் கடைக்காரரிடம் கொடுத்தனர். கடைக்காரர், 'நான் கொடுத்த, 455 ரூபாயை கொடுங்கள்' என கேட்டபோது, அதற்கு, 'நீங்கள் இவ்வளவு தான் கொடுத்தீர்கள்' என அந்த வாலிபர்கள், மிரட்டல் விடுத்தனர். கடையிலுள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான இச்சம்பவங்களும் வைரலாகி வருகிறது. நுாதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ள வாலிபர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, அரூர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Nov-2024