உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க.,வில் 200 பேர் ஐக்கியம்

தி.மு.க.,வில் 200 பேர் ஐக்கியம்

தர்மபுரி :தர்மபுரி, தி.மு.க., அலுவலகத்தில், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி முன்னிலையில், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் ஏற்பாட்டில் நேற்று, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய, பெண்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர். அவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்காக செய்து வரும் பணிகள் குறித்து, வீடு வீடாக சென்று எடுத்துக்கூற, எம்.பி., மணி அறிவுறுத்தினார்.இதில், நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் வெங்கட்ராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !