உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிராவல் மண் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்

கிராவல் மண் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியில் உள்ள கதவனேரியில், வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துக் கொண்டு இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அறையில் இருந்து வந்த தகவலை அடுத்து, அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கதவனேரிக்கு சென்றார். அங்கு சட்டவிரோதமாக டிப்பர் லாரி, டிராக்டர் டிரைலரில் கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. மேலும், கிராவல் மண் எடுக்க பொக்லைன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. 3 வாகனங்களின் ஓட்டுனர்களும் தப்பிச்சென்ற நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்து, அரூர் போலீசில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை