மேலும் செய்திகள்
'கடையடைப்பு போராட்டம் வெற்றி!'
05-Oct-2024
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில், நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்-படும்' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி எச்-சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், காவிரி உபரிநீர் திட்-டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை அக்.,4 அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த-வுள்ளதாகவும், அதில் வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு, ஒரு கட்சி சார்பாக, அறிவிக்கப்-பட்டுள்ளது. இது தொடர்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மாவட்ட நிர்-வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்-ளனர்.இதில், எந்த வணிகரையும் கட்டாயப்படுத்தி, கடையடைப்பு செய்ய சொல்லவோ அல்லது கடைகளை மூட வலியு-றுத்தி, மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே, அவ்வாறு செயல்படுவோர் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்-கொள்ளவும் யாரும் அச்சம் கொள்ள தேவை-யில்லை. வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறு-வனங்களுக்கும் போதுமான போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும். கடை வீதி, வணிக வளாகங்கள், உழவர் சந்தைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், கடையை நடத்துவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். பொதுமக்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, வணிக நிறுவனங்களில் வழக்கமாக, வாணிபம் செய்ய எவ்வித அச்சமும், தயக்கமும் கொள்ள தேவையில்லை என, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு புறம்-பாக செயல்படுபவர்கள் மீது, பொதுமக்கள் புகார் அளிக்கலாம். உரிய முறையில், அளிக்கப்படும் புகார் மீது, தகுந்த சட்ட நடவடிக்கையை போலீஸ் உறுதி செய்யும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.நாளை, பா.ம.க., சார்பில் கடையடைப்பு போராட்-டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பி-டத்தக்கது.
05-Oct-2024