அறிவியல் கண்டுபிடிப்பில் மாநில அளவில் 3ம் இடம்
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தில், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு-களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, மாநில அளவில், அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் கார்த்திக், 17, சஞ்சய்குமார், 17, ராகவன், 16, சுஜித் குமார், 17 ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள், 2 ரயில்வே நடைமேடைகளுக்கு இடையில், தானி-யங்கி நகரும் நடைபாதையை கண்டுபிடித்து, மாநில அளவில், 3ம் இடம் பிடித்தனர். இதற்கான பரிசுத்தொகை, 10,000 ரூபாய்க்-கான காசோலையை, மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா மாணவர்-களுக்கு வழங்கி பாராட்டினார். அப்போது, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்த்-தென்றல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் கவுதம் சண்முகம் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.