உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சேகர் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, நுாலஹள்ளியில் மது விற்ற கோவிந்தசாமி, 52, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமச்-சந்திரன் நேற்று முன்தினம் கோடுபட்டியில் மது விற்ற பழனி-சாமி என்பவரை கைது செய்து, 18, மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்த-குமார் நேற்று முன்தினம் பைசுஹள்ளி அருகே குண்டலஹல்லி காலனியில் மது விற்ற சின்னவள், 55, என்பவரை கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வசந்தகதிரவன் நேற்று முன்தினம் மருக்கள்நத்தம் கிராமத்தில் மது விற்ற பவுனேசன், 41, என்ப-வரை கைது செய்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி