உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

பென்னாகரம்: -பென்னாகரம் ரேஞ்சர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட பள்ளக் கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மான் வேட்டையாடி, மான் கறி சமைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் கூத்தப்பாடியை பகுதியை சேர்ந்த சந்தீப், சரவணன், விஜி, பவுனேசன் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், மான் வேட்டையாடியதாக தலா, 35 ஆயிரம் வீதம், 4 பேரிடம், 1.40 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !