மனநலம் பாதித்த 6 பேர் சிகிச்சைக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ப்பு
தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், 2022 மார்ச் 19 முதல் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்று சாலைகளில் திரிந்த மன நோயாளிகள் சமூக பணியாளர்கள் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.இங்கு சிகிச்கை பெற்ற, 6 பேர் குணமடைந்த நிலையில், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் உலக மனநல தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் மனோகரன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார், ஆர்.எம்.ஓ., நாகவேந்தன், மனநலத்துறை மருத்துவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.ரிவித்துள்ளார்.