8 சிப்ஸ் கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்
தர்மபுரி :தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் பென்னாகரம் சாலை, சோகத்துார், ஆட்டுக்காரம்பட்டி, சின்ன தடங்கம், அதகப்பாடி, பாளையம்புதுார், பாகலஹள்ளி, கெங்கலாபுரம், நல்லம்பள்ளி புறவழி சாலை மற்றும் தடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, சிப்ஸ் தயாரிப்பு நிறுவனங்களில், நல்லம்பள்ளி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.இதில், சுகாதாரம் குறைவின் காரணமாக, 2 சிப்ஸ் நிறுவனங்களுக்கு தலா, 2,000 ரூபாய், 6 நிறுவனங்களுக்கு தலா, 1,000 ரூபாய் என, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.