94 தேர்வு மையங்களில் இன்று10ம் வகுப்பு பொதுத்தேர்வு
94 தேர்வு மையங்களில் இன்று10ம் வகுப்பு பொதுத்தேர்வுதர்மபுரி:தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 225 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 88 தனியார் பள்ளிகள் என, 318 உள்ளன. இதில், 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 பேரும், 503 தனித்தேர்வர்கள் என மாவட்டத்தில், 20,539 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படை குழுவினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல், தேர்வு பணியில், 20,250 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.