உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தண்ணீர் தொட்டியில் மூழ்கிய குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய குழந்தை பலி

அரூர், நவ. 7- தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விமல், 45, கட்டட மேஸ்திரி; இவருக்கு, 2 ஆண், ஒரு பெண் என, 3 குழந்தைகள்.கடந்த, 4ல் மதியம், 3:30 மணிக்கு இரண்டரை வயதுடைய இளைய மகன் கனிஷ்வரன், வீட்டின் முன்பிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் கிடந்தான். விமல் அவனை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை