உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தபசு மாடு உயிருடன் மீட்புபாலக்கோடு, நவ. 15-பாலக்கோட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவரது நிலத்தில், கறவை மாட்டை மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். அப்போது கறவை மாடு அப்பகுதியில் இருந்த, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த செல்வராஜ், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி நிலைய அலுவலர் செல்வம் தலையில் வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றிலிருந்த கறவை மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !