உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் குறுங்காடு அமைப்பு

அரசு பள்ளியில் குறுங்காடு அமைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், என்.எஸ்.எஸ்., மற்றும் பொ.மல்லாபுரம் பேரூராட்சி இணைந்து, குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி, செயல் அலுவலர் முத்து, முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்தென்றல் வரவேற்றார். இக்குறுங்காட்டில் தேக்கு, வேம்பு, மகாகனி, வேங்கை உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை அலுவலர் பொன்னரசு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை