உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பேப்பர் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

பேப்பர் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த வேம்பனேரியை சேர்ந்தவர் அய்யாத்துரை, 50. இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த, 22ல் தன் லாரியில் சென்னையில் இருந்து சேலத்திற்கு வேஸ்ட் பேப்பரை ஏற்றிக் கொண்டு, லாரியை ஓட்டி வந்தார். அரூர் - சேலம் சாலையில் கடந்த, 23ல் காலை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி கணவாய் பகுதியில் வரும் போது, லாரியில் இருந்து புகை வந்தது. அய்யந்துரை லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது தீ மளமளவென பரவி, லாரி மற்றும் லாரியிலிருந்து பேப்பர் எரித்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ