உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரிமலைக்கு தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

ஏரிமலைக்கு தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

பென்னாகரம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டுன அள்ளி ஊராட்சி ஏரிமலை மலை கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல், வனப்பகுதி நடுவே காலம் காலமாக சென்று வருகின்றனர். அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தாலும் பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல கர்ப்பிணிகள், குழந்தைகளையும் தொட்டில் கட்டி துாக்கி நடந்து சென்று தான் வருகின்றனர். இப்பகுதி மக்கள், வனப்பகுதிக்கு நடுவே உள்ள மண் சாலையை சீரமைத்து, தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர, அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.இதையெடுத்து, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் தலைமையில் அரசு அதிகாரிகள் ஏரிமலை மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய வனப்பகுதி வழியாக உள்ள மண் சாலையை, ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின், டிராக்டர் மூலமாக மலை கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கிராம மக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளான, திறந்தவெளி சமுதாய கிணறு, குடிநீர் பைப், இலவச வீடு, 100 நாள் வேலை திட்ட அட்டை, திறந்தவெளி கிணற்றிற்கு மின் மோட்டார், செங்காடு முதல் ஏரிமலை வரை சாலை உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஆய்வில் பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், லோகநாதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ