மேலும் செய்திகள்
அம்மனிடம் மனமுருகிய பக்தர்கள்
09-Aug-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், ஆடி, 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் நடந்த வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி டவுன் வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத, வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம், பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உட்பட வாசனை திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, அங்காளம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.அதேபோல், டவுன் கடைவீதியில் உள்ள, அம்பிகா பரமேஸ்வரியம்மன் வரமஹாலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார். நெசவாளர் காலனி சவுடேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் மற்றும் கொளகத்துார் பச்சையம்மன் விபூதி அலங்காரம் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில், அம்மனுக்கு கூல், வேப்பிலை, பொங்கலை வைத்து வழிபாடு செய்தனர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கினர்.வரலட்சுமி பூஜைகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில், வரலட்சுமி பூஜை நேற்று நடந்தது. முன்னதாக காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அம்மன் பிரசாதம் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, அதியமான் கல்லுாரி மேலாளர் நாராயணன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
09-Aug-2025