மேலும் செய்திகள்
கொத்தடிமை முறைக்கு எதிராக விழிப்புணர்வு
08-Feb-2025
தர்மபுரி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தர்-மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.கொத்தடிமை தொழிலாளர் முறையை, முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்-படுத்து வேன், கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன், இந்திய அரசியலமைப்பு சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை சீரிய முறையில் செயற்ப-டுத்த உறுதுணையாக இருப்பேன் என, உறுதி மொழியை கலெக்டர் சதீஸ் வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Feb-2025