உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரூர், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தர்மபுரி மாவட்டம், அரூருக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, அரூர் என்.என்.மஹாலில், நேற்று அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயலாளரி அன்பழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்கும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சிக்கு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் குறைந்தது, 70 பேரை அழைத்து வர வேண்டும். மேலும், எவ்வளவு பேரை அழைத்து வர முடியுமோ, அவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும். வரும், 2026 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை கண்டு, அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் கதிகலங்குகின்ற அளவிற்கு இ.பி.எஸ்., அரூருக்கு வரும் போது கூட்டத்தை கூட்டி காட்ட வேண்டும்,'' என்றார்.பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரூர் நகர செயலாளர் பாபு நன்றி கூறினார். முன்னதாக கம்பைநல்லுாரிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை