அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
பென்னாகரம்: சின்னம்பள்ளியில் அ.தி.மு.க., தர்மபுரி மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரசாரம் நேற்று இரவு நடந்தது.பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலர் அன்பு வரவேற்றார். அ.தி.மு.க., தர்மபுரி மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சரமான அன்பழகன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலர் வெற்றிவேல் செய்திருந்தார். பென்னாகரம் நகர செயலர் சுப்பிரமணி, ஒன்றிய செயலர் வேலு-மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.