உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது கடத்தல் டிரைவர் கைது

மது கடத்தல் டிரைவர் கைது

ஓசூர், தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டொயோட்டா எட்டியோஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, பெங்களூருவில் இருந்து, ஈரோட்டிற்கு புகையிலை பொருட்கள், மதுபானங்களை கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டி வந்த, பெங்களூரு தொட்டபெத்தஹள்ளியை சேர்ந்த ஜாபீர்கான், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கார் மற்றும் 70,000 ரூபாய் மதிப்புள்ள, 121 கிலோ புகையிலை பொருட்கள், 3,850 ரூபாய் மதிப்புள்ள, மதுபான பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி