மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு
01-Sep-2024
ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு, 12,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அருவியில் குளிக்க, ஒன்பது நாட்களுக்கு பின் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து மெயின் பால்ஸில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
01-Sep-2024