உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரிய பா.ம.க.,

கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரிய பா.ம.க.,

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும் அக்., 4ல் அரை நாள் மாவட்டம் முழுவதும், பா.ம.க., சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதையடுத்து நேற்று, அக் கட்சியின் கவுரவ தலைவரும் எம்.எல்.ஏ.,வுவான, ஜி.கே.மணி தலைமையில், பா.ம.க.,வினர் பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்துார் பேரூராட்சிகளி-லுள்ள வணிகர் சங்க நிர்வாகிகள், வணிகர்களை நேரடியாக சந்-தித்து, கடையடைப்புக்கு ஆதரவு திரட்டினர்.பின் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, மாவட்ட செயலாளர் அரசாங்கம், நிர்வா-கிகள் செந்தில், இமயவர்மன், மதியழகன் அல்லிமுத்து, தேர்தல் பணிக்குழு அறிவழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை