உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சரக போட்டிகளில் வெற்றி

அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சரக போட்டிகளில் வெற்றி

அரூர், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார், அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், காரிமங்கலத்தில் சரக அளவில் நடந்த தடகள போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு, எறிபந்து குழு போட்டியில் முதலிடமும், 14 வயது எறிபந்து போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள், 2ம் இடமும், 19 வயது ஆண்கள் எறிபந்து போட்டியில், 2ம் இடமும், கைப்பந்து போட்டியில், 14 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். கடற்கரை கைப்பந்து போட்டியில், 14 வயது ஆண்கள் பிரிவில், 2ம் இடம், வட்டு எரிதலில், 17 வயது ஆண்கள் பிரிவில் முதலாம் இடம், பெண்கள் பிரிவில், 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில், 14 வயது பெண்கள் பிரிவில் முதலிடமும், 3ம் இடமும் பிடித்தனர். மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் மாணிக்கம், சுமதி மாணிக்கம், நிர்வாக இயக்குனர்கள் அமல்நாத், ராகுல், பள்ளி முதல்வர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ