ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு அரூரில் உறுதிமொழி ஏற்பு
ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வுஅரூரில் உறுதிமொழி ஏற்புஅரூர், அக். 29-அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், 'நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன். அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்துவேன். பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன். தனிப்பட்ட நடத்தையில், நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன். ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்' என, அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.