உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் படித்து அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்போருக்கு பாராட்டு விழா

அரசு பள்ளியில் படித்து அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்போருக்கு பாராட்டு விழா

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த சத்யநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், 7.5 சத-வீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு, பாராட்டு விழா சின்னப்பள்ளத்துார் பள்ளி தலைமையாசிரியர் பழனி தலைமையில் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் குப்பாகவுண்டர் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், ராஜ்குமார், குபேந்திரன், சங்கர், குழந்தைவேல் மற்றும் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாங்கரை மற்றும் பி.அக்ரஹாரம் மேல்நிலைப் பள்ளியில் படித்து, மருத்-துவக் கல்லுாரியில் சேர்ந்திருக்கும், 9 மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி, ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலு-வலர் கண்ணையன் வழங்கினார். நிகழ்ச்சியில், ஊர் கவுண்டர் சண்முகம், சக்திவேல் மற்றும் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்திருக்கும் மாங்கரை மேல்நிலைப்-பள்ளி மாணவர்கள் துளசிநாதன், கனிமொழி, மணிஷா, கதி-ரவன், ஆர்த்தி, பி.அக்ரஹாரம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜெகதீஸ், ஆகாஷ், சிவரஞ்சனி, கோகுல் ஆகியோர், அவர்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஊர்மக்கள், மாணவர்கள் பாராட்டினர். சத்திநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிர-காசம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி