உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு

அரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு

அரூர் : அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி வெளியிட்டுள்ள அறிக்கை: அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-- 25 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான, 2ம் கட்ட பொது கலந்தாய்வு, இன்று, (ஜூன், 24) முதல், வரும், 26 வரை, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், தாவரவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்ப படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என, 7 ஆவணங்களை, 3 செட் கொண்டு வர வேண்டும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ளுமாறும், சேர்க்கை பெற்ற மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை, அன்றே கல்லுாரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மற்றும் விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ