மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது
24-Jan-2025
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொனங்கனுாரை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் மாரப்பன், 23. இவருக்கும், அரூர் பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவிக்கும் நேற்று காலை திரு-மணம் நடக்க இருந்தது. இதற்காக, இரு வீட்டாரும் திருமண ஏற்-பாடுகளை செய்து வந்தனர்.நேற்று அதிகாலை, வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்-தது. அதன்படி, பே.தாதம்பட்டி வி.ஏ.ஓ., நாகராஜ், வாச்சாத்தி வி.ஏ.ஓ., மதியழகன், கோபிநாதம்பட்டி போலீசார், குழந்தைகள் நல அலுவலர்கள், கல்லுாரி மாணவியின் குடும்பத்தினரிடம், 18 வயது ஆகாமல் திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்வதால் ஏற்படும் பிரச்னை குறித்து மாணவியின் பெற்றோரிடம் எடுத்து கூறினர். இதையடுத்து, நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்-தப்பட்டது.
24-Jan-2025