உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உணவகங்களில் செயற்கை நிறமூட்டி தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு

உணவகங்களில் செயற்கை நிறமூட்டி தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு

ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பொறித்த மீன்கள், இறைச்சி ஆகியவற்றில் தேவையற்ற செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாகவும், பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று ஒகேனக்கல்லில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் குறித்தும், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துதல் கூடாது எனவும், விழிப்புணர்வு செய்யப்பட்டது. கலெக்டர் அறிவுறுத்தல் படி, உணவகம் மற்றும் பொறித்த மீன், இறைச்சி விற்பனை நிலையங்களில், 'எங்கள் கடையில் இறைச்சி, பொறித்த மீன் வகைகளில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதில்லை' என, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை