உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாம்பு கடித்து பேக்கரி மாஸ்டர் சாவு

பாம்பு கடித்து பேக்கரி மாஸ்டர் சாவு

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய கோப்பனபள்ளி அடுத்த கரடிகோல்லப்பட்டியை சேர்ந்த சசிகுமார், 38, இவருக்கு தனலட்சுமி 36, என்ற மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சசிகுமார் தர்மபுரியில் உள்ள பேக்கரி ஒன்றில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த, 1ம் தேதி இரவு, 11:00 மணிக்கு வேலை முடிந்த பின், தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்வதற்காக அவருடைய நண்பர் அசோக் என்பவரின் எலக்ட்ரிக் பைக்கில் இருவரும் சென்றனர். தர்மபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரி அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக சசிகுமார் ஏரிக்கரையோரம் சென்றபோது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரது நண்பர் சசிகுமாரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின் மேல்சிகிச்சைக்கு கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு உயிரிழந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி