உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

அரூர்; அரூர், கச்சேரிமேட்டில், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. இவற்றிற்கு தினமும், நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், பொது கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண்கள், முதியவர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கச்சேரி மேட்டில் கழிப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை