மேலும் செய்திகள்
சந்தைக்கு வரத்து குறைவு வெற்றிலை விலை உயர்வு
11-Aug-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியில் நேற்று, வெற்றிலை வாரச்சந்தை நடந்தது. இதில், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, காங்கேயம், அரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகள் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில், பொம்மிடி, கே..என்.புதுார், கொமத்தம்பட்டி, முத்தம்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, தாளநத்தம், அய்யம்பட்டி, காவேரிபுரம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை கடந்த வாரம், 8,000 முதல், 17,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்றும், 8,000 முதல், 17,000 ரூபாய்க்கு விற்றது. சந்தையில், நேற்று மொத்தம், 250 வெற்றிலை மூட்டைகள், 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
11-Aug-2025