பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, பா.ஜ., சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பா.ஜ., தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நகர தலைவர் சாய் ஆறுமுகம், மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா உட்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இதில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவு இருந்தும் தீபம் ஏற்ற, தமிழக அரசு அனுமதிக்கவில்லை.நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும், தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில், பா.ஜ., மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.