உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

பாலக்கோடு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, தீவிரவாதிகள் முகாம் மற்றும் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய, சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இந்-திய படைக்கு நன்றி தெரிவித்தும் நேற்று, பாலக்கோடு ஒன்றிய, பா.ஜ., சார்பில், மூவர்ணக்கொடி வெற்றி ஊர்வலம் நடந்தது.கிழக்கு ஒன்றிய தலைவர் சிவநாதன் தலைமை வகித்தார். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா, நெசவாளர் அணி பிரிவு முன்னாள் மாநில செயலாளர் சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமானிமல்லாபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில் அருகேயிருந்து துவங்கிய ஊர்வலம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. பா.ஜ.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.* கடத்துார், பா.ஜ., மேற்கு ஒன்றியம் சார்பில், கடத்துாரில் தேசியக்கொடி பேரணி மண்டல தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் வரதராஜன், சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை