அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தர்மபுரி, தமிழகத்தில் நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தை, தர்மபுரி மாவட்டம், அரூர் புனித அன்னாள் நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாவட்ட சதீஸ், நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், நகர்புற அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதால், 2 நகர்புற அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும், 297 மாணவ, மாணவியர் பயனடைய உள்ளனர். அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 2025 --26 கல்வி ஆண்டில், 1,130 பள்ளிகளில், 45,987 மாணவ, மாணவியர் பயனடைகின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா, ஆர்.டி.ஓ., செம்மலை, டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால், கவுன்சிலர் முல்லை ரவி, டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தர்மபுரி நகராட்சி, 13வது வார்டிலுள்ள, 'திருவள்ளுவர் அறிவகம்' அரசு உதவி பெறும் பள்ளியில், காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதில், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, கமிஷ்னர் சேகர் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.