உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  போக்சோ வழக்கில் வாதாட லஞ்சம்: சிக்கிய அரசு வக்கீல்

 போக்சோ வழக்கில் வாதாட லஞ்சம்: சிக்கிய அரசு வக்கீல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த, 45 வயது தொழிலாளியின், 13 வயது மகள், அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், 2022ல் பொம்மிடி போலீசார், அந்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு, தர்மபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கல்பனா, 55, வழக்கை சிறுமிக்கு ஆதரவாக நடத்த, சிறுமி தந்தையிடம், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத அவர், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். போலீசார், ரசாயனம் தடவிய, 10,000 ரூபாயை அவரிடம் கொடுத்தனுப்பினர். நேற்று காலை, தர்மபுரி - பென்னாகரம் சாலையில், ஜெய் நகரிலுள்ள வக்கீல் கல்பனா வீட்டிற்கு சென்று, அவர் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கல்பனாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ