மேலும் செய்திகள்
ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
25-Dec-2024
பாலக்கோடு: பாலக்கோடு அருகே பொங்கலையொட்டி, எருது விடும் விழா நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெலமாரனஹள்ளியில், பொங்கலையொட்டி எருது விடும் திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி நேற்று மாலை நடந்த எருது விடும் நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக, கிராம மக்கள் மேள தாளங்களுடன், கோ பூஜை செய்து, புனித நீரை காளைகளின் மேல் தெளித்த பின், ஊர் கவுண்டர் முன்னிலையில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க, ஏராளமான இளைஞர் போட்டி போட்டு விரட்டி சென்றனர். இதை காண பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து, எருது விடும் விழாவை கண்டு களித்தனர். மாரண்டஹள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25-Dec-2024