உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புற்றுநோய் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

புற்றுநோய் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் கேன்சர் மையம் சார்பில், கலெக்டர் அலுவலகத்திலுள்ள அதியன் கூட்டரங்கில், பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ், முகாமை துவக்கி வைத்து பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில், புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பரிசோதனையால் இந்த புற்றுநோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள உதவும்,'' என்றார்.இதில், மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனர் சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை