மேலும் செய்திகள்
குடிசை வீட்டில் தீ
17-Jan-2025
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த ஆனைகல்லனுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன், 37; பஞ்., முன்னாள் துணை தலைவரான இவர், அதே பகுதியில், ஈ - சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த, பொங்கல் பண்டிகையன்று புதியதாக பேலினோ கார் வாங்கியுள்ளார். அந்த காரை தனது மையத்தின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அக்கார் தீப்பிடித்து சத்தத்துடன் எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. பென்னாகரம் தீயணைப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். கார் உரிமையாளர் சரவணன் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17-Jan-2025