மேலும் செய்திகள்
தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
30-Oct-2025
ஏற்காடு, சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில், 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து, இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராஜகணேசன் மகன் விக்னேஷ், 32, என்பவர் டாடா நெக்ஸான் காரில், நண்பர் மோகன், 33, என்பவருடன் ஏற்காடு வந்துள்ளார். இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு நேற்று மாலை, 5:30 மணிக்கு ஏற்காடு குப்பனுார் மலைப்பாதை வழியாக, அம்மாபேட்டைக்கு திரும்பி சென்றனர்.காரை விக்னேஷ் ஓட்டினார். மலைப்பாதையில் வழுக்குப்பாறை என்ற இடத்திற்கு அருகில், கார் சென்றுபோது சாலையை குரங்கு கடந்து சென்றது. அதை பார்த்த விக்னேஷ், குரங்கு மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரை இடித்து, 25 அடி பள்ளத்தில் வனப்பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், வனப்பகுதியில் கவிழ்ந்த காரில் இருந்த இருவரையும் மீட்டு, சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Oct-2025