மேலும் செய்திகள்
அரிவாள் படத்துடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
20-Feb-2025
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, திருமண வரவேற்பு விழாவிற்கு, அரிவா-ளுடன் பேனர் வைத்த, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, தாசம்பட்டி பிரிவு சாலையிலுள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவில் அருகே, கடந்த, 16 அன்று நாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல் மற்றும் இருமத்-துாரை சேர்ந்த லதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடந்-தது. இதற்காக, அவரது நண்பர்கள் சார்பில், சாலையோரம் பேனர் வைத்திருந்தனர். அதில், இருவரது கையில் அரிவாளுடன், 'வர-வேற்கிறது நாங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்க' என்ற வாச-கங்கள் இருந்தன. மேலும், அனுமதியின்றியும், போக்குவரத்து மற்றும் பொதுமக்க-ளுக்கு இடையூறாகவும் பேனர் வைத்ததாக, நாயக்கனுாரை சேர்ந்த, முருகன், 23, பிரகாஷ், 28, அலெக்ஸ், 24, பிரகாஷ், 23, ஜீவா, 33 உள்பட, 6 பேர் மீது, பென்னாகரம் போலீசார் வழக்-குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Feb-2025