பட்டாசு பதுக்கியவர் மீது வழக்கு
மொரப்பூர், நவ. 1- தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் உள்ள கடை ஒன்றில், அதே பகுதியை சேர்ந்த ஜெரின் என்பவர் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., விஜயன், 54, அளித்த புகார் படி, மொரப்பூர் போலீசார் ஜெரின் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.