உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூலி தொழிலாளி மீது தாக்குதல்த.வெ.க., நகர செயலாளர் மீது வழக்கு

கூலி தொழிலாளி மீது தாக்குதல்த.வெ.க., நகர செயலாளர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பொம்மிடி, வினோபாஜி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,38; கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தன் நண்பர் ராஜி என்பவருக்காக, த.வெ.க., வில் பொறுப்பு கேட்டு அக்கட்சியின் மாவட்ட செயலாளரை சந்தித்தார். இதனால் பொம்மிடி த.வெ.க.,நகர செயலாளர் கார்த்திகேயனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 2 மாலை, 5:30 மணியளவில், வேலைக்கு சென்று விட்டு ரவிச்சந்திரன் பொம்மிடி கூட்டுறவு சொசைட்டி அருகே வந்தார். அப்போது பொம்மிடி த.வெ.க..நகர செயலாள கார்த்திகேயன்,35, பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த கிருஷ்ராஜ்,48, சரண்,25, கில்,35, கிருஷ்ராஜ் மகன் ஆகிய,5 பேரும் சேர்ந்து, ரவிச்சந்திரனை தகாத வார்த்தையால் திட்டி, கட்டையால் அடித்தனர். பீர் பாட்டிலால் குத்தினர். இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். புகாரின் படி பொம்மிடி போலீசார், த.வெ.க., நகர செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட, 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை