மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
7 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
7 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
7 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
7 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி நகரில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன்புவரை வைகாசி விசா-கத்தின் போது தேரோட்டம் நடத்தப்பட்டு வந்தது. பின், தேர் பழுதானதால், 10 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி கடைவீதியில் உள்ள தேர்முட்டி என்ற இடத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.தர்மபுரிக்கு பெருமை சேர்ந்து வந்த மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை நடத்தும் வகையில், சேதமான தேரை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர். செலவு அதிகரிக்கும் பட்சத்தில், கோட்டை பர-வாசுதேவ சுவாமி கோயில் லட்டு பிரசாத குழுவினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். தேர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழைய தேரில் இருந்த மரசிற்பங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, புதிய தேரில் பழமை மாறாமல் பொருத்தப்பட்டு வருகிறது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago