மேலும் செய்திகள்
உடைந்த தடுப்பணை கட்டைகள் சீர் செய்யப்படுமா?
27-Oct-2025
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, கழனிகாட்டூரில் நீர் ஆதாரமாக விளங்கிய, 3 தடுப்பணைகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன.அதன் பின் தடுப்பணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மழை நீர் வீணாகி வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ்., கழனிகாட்டூரில் தண்ணீரை தேக்கி வைக்க, நீரோடைகளில் கட்டப்பட்டிருந்த, 3 தடுப்பணைகள் கடந்த, 2022 ஆக., 2 அன்று பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இவை சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய நீர் ஆதாரமாக இருந்தன. இதனால், கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்தது.தடுப்பணைகள் உடைந்ததால், நீரோடையில் வந்த நீர் முழுவதும் நேரடியாக, நாகாவதி அணைக்கு சென்று விட்டது. இதனால், கடந்த, 2 ஆண்டுகளாக கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.தடுப்பணைகள் அடித்து செல்லப்பட்டது குறித்து, நாகர்கூடல் பஞ்., நிர்வாகம் சார்பில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., மற்றும் பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டுகின்றனர். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் வனப்பகுதியில் இருந்து மழைநீர், வீணாக நாகாவதி அணையில் கலந்து வருகிறது.அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கால், அடுத்த ஆண்டு வரும், கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தடுக்க, மாவட்ட நிர்வாகம், பருவமழை காலத்தில் வரும் மழைநீரை சேமிக்க, உடைந்த தடுப்பணைகளை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Oct-2025