உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சென்னை- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை

சென்னை- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை

தர்மபுரி, சென்னை- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நின்று செல்ல மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வரையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12695, 12696) தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வழியாக தினமும் சென்று வருகிறது. இந்த ரயில், தர்மபுரி மாவட்டத்தில் எந்த ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தம் இல்லை. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க, தர்மபுரி மாவட்ட ரயில் பயணிகள் சார்பில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து, ராஜ்ய சபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் தெரிவித்தார். அதன்படி, சென்னை - -திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் தினமும், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், நிறுத்தி செல்ல, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எக்ஸ்பிரஸ் ரயிலை, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுத்த, பா.ஜ., மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ., அன்பழகன் ஆகியோருக்கு, ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி