உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி;செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி;செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த, 'முதல்வர் கோப்பை - 2025' கூடைப்பந்து போட்டியில், செந் தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை வென்றனர். பள்ளியின், 5 வீரர்கள், சச்சின், பிரசன்னா, நவநீதன், ஸ்ரீஜன், சகித் ஆகியோர், தர்மபுரி மாவட்ட அணியில் தேர்வு செய்யப்பட்டு, கோவை யில் நடக்கவுள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தர்மபுரி மாவட்ட அணியில் பங்கேற்க உள்ளனர்.அவர்களை, தர்மபுரி மாவட்ட க‍லெக்டர் சதீஸ், பதக்கம், சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இம்மாணவர்கள் மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர்களை செந்தில் அறக்கட்டளை தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலை வர் மணிமேகலை கந்த சாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்தியேன், முதன்மை முதல் வர் சீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ